MT hardware and transport

MT hardware and transport Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MT hardware and transport, Building Materials, Master yard, No 20/14, church Lane, Valaiamman kovilady, Thirunelvely east, near kopay police station, Jaffna.

கடலின் ஆழத்தில் மணலுக்கு அடியில் 10 ஆண்டுகளாகப் புதைந்திருந்த  #ரோலக்ஸ்  #கைக்கடிகாரம்! அது கண்டுபிடிக்கப்பட்டபோது அதன் ...
31/03/2026

கடலின் ஆழத்தில் மணலுக்கு அடியில் 10 ஆண்டுகளாகப் புதைந்திருந்த #ரோலக்ஸ் #கைக்கடிகாரம்! அது கண்டுபிடிக்கப்பட்டபோது அதன் உரிமையாளர் அதிர்ச்சி.

இன்று நான் உங்களுக்கு ஒரு உண்மைக் கதையைச் சொல்லப் போகிறேன், இது ஒரு திரைப்படக் கதையையும் தாண்டியது. நாம் அனைவரும் பொதுவாக ஒரு கைக்கடிகாரத்திற்காக ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகிறோம், ஆனால் அதில் சிறிதளவு தண்ணீர் புகுந்தாலோ அல்லது அது கீழே விழுந்தாலோ, நாம் ஆச்சரியப்பட்டு, "ஓ, அது உடைந்துவிட்டது" என்று கூறுகிறோம். ஆனால், ஒரு சர்பிங் வீரரின் தொலைந்துபோன கைக்கடிகாரம், 10 ஆண்டுகளாக உப்பு நீர், மணல் மற்றும் அலைகளில் மூழ்கியிருந்த பிறகும் சரியாக இயங்கிக்கொண்டிருந்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், இது ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு அற்புதமான சம்பவம். கடலை வென்ற ரோலக்ஸ் சப்மரைனர் என்ற இந்தக் கைக்கடிகாரத்தின் கதையைக் கேட்டால், அதன் அசல் தன்மையால் நீங்கள் நிச்சயமாக வியப்படைவீர்கள்.

ஆனால், இந்தக் கைக்கடிகாரம் எப்படி தொலைந்து போனது? அது மீண்டும் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? இந்த விறுவிறுப்பான பயணத்தைப் பார்ப்போம்.

1. இந்தக் கதை எங்கே தொடங்கியது?

இந்தச் சம்பவம் 2013-ல் நடந்தது. மாட் கிராஸ் ஆஸ்திரேலியாவின் அழகான கோல்ட் கோஸ்டில் சர்பிங் செய்துகொண்டிருந்தார். அவர் பொழுதுபோக்கிற்காக சர்பிங் செய்துகொண்டிருந்தபோது, ​​ஒரு பெரிய அலை அவரைத் தாக்க, அவர் கடலில் விழுந்தார். அந்தக் குழப்பத்தில், அவனது விலையுயர்ந்த ரோலக்ஸ் சப்மரைனர் கைக்கடிகாரம் அவன் கையிலிருந்து பறிக்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டது.

மேட் மிகவும் தேடியும், அந்த முடிவற்ற கடலில் அந்தச் சிறிய கைக்கடிகாரத்தைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கவில்லை. இறுதியாக, அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, "இது விதி, அதை விட்டுவிடு" என்று கூறினான்.

2. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஒரு அற்புதம்!

சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில், ரிக் ஆண்டர்சன் அதே கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தபோது, ​​மணலுக்கு அடியில் ஏதோ ஒன்று பிரகாசிப்பதைக் கண்டான். அவன் சிறிதளவு மணலை அகற்றியபோது, ​​அதே ரோலக்ஸ் கைக்கடிகாரத்தைக் கண்டான்!

அந்தக் கைக்கடிகாரம் பத்து ஆண்டுகளாக உப்புநீர்க் கடலில், புயல்களிலும் அலைகளிலும் சிக்கியிருந்தது, ஆனால் அது மணலுக்கு அடியில் பாதுகாப்பாக இருந்தது. முதலில், ரிக் அது ஒரு பிளாஸ்டிக் கைக்கடிகாரமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான், ஆனால் அவன் அருகில் சென்றபோது, ​​அது ஒரு உண்மையான ரோலக்ஸ் என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டான்.

3. உண்மையான தரம் ஒருபோதும் தோல்வியடையாது!

இதுதான் இந்தக் கதையின் மிகப்பெரிய திருப்புமுனை. அவன் அந்தக் கைக்கடிகாரத்தைக் கடலிலிருந்து வெளியே எடுத்து, அதைச் சிறிதளவு சுத்தம் செய்தபோது, ​​ரிக் ஆண்டர்சனுக்கு ஒரு பெரிய அற்புதம் நிகழ்ந்தது. பத்து வருடங்களாக உப்பு நீரில் மூழ்கியிருந்த பிறகும், அந்தக் கைக்கடிகாரம் சரியாக இயங்கிக்கொண்டிருந்தது! ⏰💪

பொதுவாக, உப்பு நீர் எந்த உலோகத்தையும் அரித்துவிடும். ஆனால், ரோலக்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பும் பொறியியலும் மிகவும் வலிமையானவை என்பதால், அவை ஆழ்கடலின் அழுத்தத்தைத் தாங்கக்கூடியவையாக இருந்தன. அதனால்தான், "ஒரு பிராண்ட் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, அது தரம்" என்று கூறுகிறார்கள். இந்தக் கைக்கடிகாரத்தின் சக்திக்கு இதைவிடப் பெரிய சான்று வேறில்லை.

4. அதன் உரிமையாளரிடம் திரும்பிய ஒரு கைக்கடிகாரம்!

ரிக் ஆண்டர்சன் அதோடு நின்றுவிடவில்லை. அவர் அந்தக் கைக்கடிகாரத்தின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அதன் உரிமையாளரைத் தேடத் தொடங்கினார். இந்தச் செய்தி வைரலாகப் பரவி, இறுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கைக்கடிகாரத்தைத் தொலைத்திருந்த மாட் கிராஸைச் சென்றடைந்தது.

மாட் அந்தக் கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது, ​​அவர் கண்களில் கண்ணீர் ததும்பியது. "பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் மறந்த ஒரு பொருள் என்னிடம் திரும்பி வந்தது ஒரு அதிசயம்," என்று அவர் கூறினார். கடலின் ஆழத்திலிருந்து உரிமையாளரின் மணிக்கட்டிற்கு வந்த இந்தப் பயணம் உண்மையிலேயே ஆச்சரியமானது. 🌍💖

5. இந்தச் சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?

* தரத்திற்கு ஒரு விலை உண்டு: நீங்கள் பணம் முதலீடு செய்து ஒரு நல்ல தரமான பொருளை வாங்கினால், அது என்றென்றும் நிலைத்திருக்கும், இந்த ரோலக்ஸ் இதற்கு ஒரு உதாரணம். 🏆💫

* நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள்: உங்கள் பொருள் எவ்வளவு தூரம் சென்றாலும், அதைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தால், அது ஏதேனும் ஒரு வடிவத்தில் திரும்பி வரும்.

* கடலின் ரகசியங்கள்: கடல் நமக்குள்ளே எத்தனை ரகசியங்களையும் விஷயங்களையும் கொண்டுள்ளது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

6. ஒரு சாமானியனின் கண்ணோட்டம்

இதுபோன்ற ஆடம்பரமான கைக்கடிகாரங்களை வாங்குவது நம் அனைவருக்கும் ஒரு கனவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதை நமக்கு அளிக்கும் உத்வேகம் அதைவிடப் பெரியது. இது வெறும் கைக்கடிகாரக் கதை மட்டுமல்ல, மனித கைவினைத்திறனுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒரு அற்புதமான சாகசக் கதை. 🌊✨

பத்து ஆண்டுகளாக மணலுக்கு அடியில் புதைந்து கிடந்தும் சேதமடையாமல் இருந்த அந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்திற்கு ஒரு சல்யூட்.

நண்பர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறதா? உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது தொலைந்து போன ஒரு பொருளை அதிசயமாகக் கண்டுபிடித்திருக்கிறீர்களா? உங்கள் அனுபவத்தை கமெண்ட்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். உண்மையான தரம் ஒருபோதும் குறையாது, இல்லையா?@

30/01/2026
வீட்டில்_வளர்க்கக்_கூடாத மரங்கள்_எவை?பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்குவெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்குகல்யாண வ...
30/01/2026

வீட்டில்_வளர்க்கக்_கூடாத மரங்கள்_எவை?

பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு
வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்
வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்
நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே
குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி
ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு
இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
பரதேசியாயிருப்பார் பாரே"

அகத்தியர் புனசுருட்டு - 500

இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்
பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர்.

மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள்
வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி
நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.

இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.

எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே
அகற்றி நலம் பெறுங்கள்.

மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் :

1.பருத்தி,
2.அகத்தி,
3.பனை,
4.நாவல்,
5.அத்தி,
6.எருக்கு,
7.வெள்ளெருக்கு
8.புளியமரம்,
9.கருவேலன்,
10.முருக்கு,
11,கல்யாண முருங்கை,
12.கள்ளி
13.கருவூமத்தை,
14.இலவம்,
15.வில்வம்,
16.உருத்திராட்சம்,
17.உதிரவேங்கை"

இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.

29/01/2026

நீரிழிவு நோயும் - வாஸ்துவும் :
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கான சில வாஸ்து குறிப்புகள் மற்றும் தீர்வுகள் பற்றி காண்போம்.

இன்றைய உலகில் அதிகபட்சம் பேர், இந்த நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு, ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இந்த நீரழிவு நோயினால், உடல் மெலிந்து, சக்தி இழந்து, மாரடைப்பு, கால்களில் பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு என்று தொடர் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

நான் வாஸ்து பார்க்க சென்ற பல இடங்களில், பலர் இந்த நோயால் துன்பப்படுவதை பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன். அவர்கள் வீட்டில் ஆராய்ந்து பார்த்த போது வீட்டில் இருந்த குறைபாடு காரணமாக சிலருக்கு நீரிழிவு நோய் உண்டாகி இருந்தது. சிலருக்கு பரம்பரை நீரிழிவுநோய் உண்டாகி இருந்தது.

நாம் வாங்கி வந்த விதிப்பயன் அடிப்படையில், ஜாதக ரீதியாக ஆறாம் பாவத்திற்கு சுக்கிரன் அல்லது குரு பகவான் தொடர்பு உண்டாகும் பொழுது நீரிழிவு நோய் உண்டாகிறது, இன்னும் பல ஜோதிட விதிகள் உள்ளது.

இன்றைய நவீன உலகில் தவறான உணவு பழக்கவழக்கங்கள் / வாழ்க்கை முறைகளால் இந்த நோயின் தாக்கம் அதிகமாக பரவி, நீரிழிவு சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் கூட்டம் தள்ளி சாய்கிறது. சரி அவர்களும் மருத்துவம் பார்த்து மருந்துகளை கொடுக்கிறார்கள். ஆனால் யாருக்காவது நோய் தீர்ந்து உள்ளதா என்று பார்த்தால் இல்லை. 0.5 Mg வில் ஆரம்பிக்கும் மாத்திரையானது 1.0 mg/ 2.0mg/ Insulin injection இன்று மருந்தின் அளவு தான் கூடிக்கொண்டே போகிறது ஆனால் நோய் குணமாவது இல்லை. அவர்கள் ஆயுள் முடியும் வரை உடனிருந்தே கொல்கிறது.

நீரிழிவு நோயின் வகைகள்:

1. பரம்பரையாய் வரும் நீரிழிவு நோய் .
2. இடையில் வரும் நீரிழிவு நோய் .
3. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் நீரிழிவு நோய் .

இதில் முதலாவது வகைக்கு மருத்துவம் பார்த்து சரியானவர்கள் மிகக் குறைவு .
இப்பதிவில் அதைப்பற்றி நாம் பார்க்கப் போவதில்லை. அதேபோல் மூன்றாவது வரைக்கும் நாம் பார்க்கப்போவதில்லை.

இரண்டாவது வகையான , இடையில் வரும், உணவு / கலாச்சார சீரழிவு / வாழ்க்கை முறையினால் ஏன் நோய் உண்டாகிறது என்பதைப் பார்க்கலாம்.

நீரிழிவு நோய் உண்டாவதற்கான காரணங்கள் :

நமது உடலில் கணையம் என்ற உறுப்பில், இன்சுலின் என்ற மருந்து எப்போதும் சுரந்து கொண்டே உள்ளது. அது நாம் உண்ணும் உணவில் உள்ள பொருட்களை கார்போஹைட்ரேட் ஆக மாற்றி அதில் உள்ள சக்தியை மட்டுப்படுத்தி, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. அவ்வாறு செய்யும் பொழுது உடலுக்கு தேவையான சர்க்கரை அளவு கிடைத்து, உடல் ஆரோக்கியமாக உள்ளது.

கணையத்தால் உங்கள் இரத்தத்தில் இன்சுலினை சரியாக சுரக்க முடியவில்லை என்றால், கார்போஹைட்ரேட்டுகள் செரிக்கப்படாமல் இருக்கும், இது உங்கள் உடலில் நேரடியாக ரத்தத்தில் கலந்து, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

கணையம் இரத்த ஓட்டத்தில் இன்சுலின் வெளியிடுவதை நிறுத்துவதால், உங்கள் உடலுக்கு சரியாக என்ன நடக்கிறது?

கணையத்திற்கு சற்று மேலே கல்லீரல் என்று அழைக்கப்படும் மற்றொரு உறுப்பு உள்ளது.

நாம் உண்ணும் எண்ணெய் பதார்த்தங்கள், ஜங்கிள்உணவு (Fast Food) சரியாக செரிக்காமல் , கல்லீரல் கொழுப்பாக மாறுகிறது. மேலும் கல்லீரலின் அளவை (பருமன் ) அதிகரிக்கிறது, இது கணையத்தில் அழுத்தத்தை உருவாக்குகிறது.
அந்த அழுத்தம் ஒரு தடையை உருவாக்குகிறது. மேலும் கணையம் இரத்த ஓட்டத்தில் இன்சுலின் வெளியிடுவதை நிறுத்துகிறது.

நம் உடலில் இன்சுலின் எவ்வாறு குறைகிறது, இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது, என்ற இந்த தகவலை மருத்துவர் மூலம் நான் அறிந்து கொண்டேன்.

மருத்துவரீதியாக கொழுப்பு கல்லீரல் நீரிழிவு நோய்க்கு ஒரு முக்கிய காரணம். மேலும் இது தவிர, மற்ற காரணங்களும் உள்ளன.

உணவு அஜீரணம், கோபம், மன அழுத்தம் மற்றும் பதற்றம், ஆகியவையும் நீரிழிவு நோய் உண்டாவதற்கு காரணங்களாக அமைகிறது.மன அழுத்தம் மற்றும் பதற்றம் நீரிழிவு நோய்க்கு மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்து காரணங்களை, ​​நான் இதை வாஸ்துவுடன் இணைத்து பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்ததில் சில தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன, கோபம், மன அழுத்தம், பதற்றம், ஆகியவை காரணமாக நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் கல்லீரல், கணையம் போன்றவற்றுக்கு பாதிப்பு உண்டாகிறது என்று கண்டறியப்பட்டது.

மன அழுத்தம் பதட்டம் உண்டாவதற்கு வாஸ்து ரீதியாக என்ன காரணம்:

வாஸ்து மூல நூல்களில் 16 திசைகளுக்கும் பதினாறு உடலுறுப்புகளை நம் முன்னோர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். எந்த திசை சார்ந்து வாஸ்து குறைபாடு உள்ளதோ அந்த உடலுறுப்பில் நோய்த்தாக்கம் உண்டாகிறது, என்று வாஸ்து அறிவியல் கூறுகிறது.

அதனடிப்படையில் கோபம் டென்ஷன் மன அழுத்தம் மனக்கவலை மனப்பதட்டம் ஆகியவைகளை குறிக்கும் திசைகளை நம் முன்னோர்கள் வகைபடுத்தி இருக்கிறார்கள்.

வாஸ்துவில் நீரிழிவு உண்டாக முக்கிய திசை உள்ளது.

1.கிழக்கு - தென் கிழக்கு திசை - ESE (தென் கிழக்கு அல்ல).வாஸ்து சாஸ்திரத்தின்படி கவலை, மன அழுத்தம், பதற்றம் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கு கிழக்கு - தென்கிழக்கு (ESE) திசை காரணம் ஆகும்.

2. தெற்கு - தென்மேற்கு SSW வாஸ்து சாஸ்திரத்தின்படி செரிமானக் கோளாறுகளை உண்டாக்குகிறது.

3 . வடமேற்கு திசையும் நீரிழிவு நோய் உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது.

இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள முக்கிய ஏற்றத்தாழ்வு நெருப்பு சம்பந்தப்பட்ட உறுப்பு. கல்லீரல் ஆகட்டும் கணையம் ஆகட்டும் உடலின் மொத்த இயக்கமும் வெப்பம் சம்பந்தப்பட்ட இயங்குகிறது. ஒரு உடலில் வெப்பநிலை இல்லாமல் போய்விட்டால் அது சவமாகிவிடும். இதன் மூலம் நமது உடலுக்கு வெப்பம் என்பது எப்படி இயங்கு சக்தியாக இருக்கிறது என்பது நமக்கு தெரியவருகிறது.

நாம் நம் வீட்டில் அக்கினியை வளர்த்து சமைக்கும் இடமானது சரியான கோணத்தில் அமைய வேண்டும். தவறான இடத்தில் அமையும் பட்சத்தில் அந்த இல்லங்களில் வசிப்போருக்கு நோய்த்தாக்கம் உண்டாவது உறுதி என்று ஆய்வில் தெரிய வந்தது.

நாம் நெருப்பு உறுப்பு பற்றி பேசினால், எரிவாயு அடுப்பு முக்கியமாக நெருப்பு உறுப்பு மூலம் குறிப்பிடப்படுகிறது.அது தவிர, ஏர் பிரையர், எலக்ட்ரிக் ஸ்டவ், மைக்ரோவேவ், உள்ளமைந்த வாட்டர் ஹீட்டர் , மேல் தளத்தில் அமைந்திருக்கும் சோலார் வாட்டர் ஹீட்டர், சுவரில் உள்ள சிவப்பு நிறம், சிவப்பு நிற திரைச்சீலைகள் போன்றவையும் நெருப்பு உறுப்பைக் குறிக்கின்றன.

பலருடைய வீட்டில், திசைகள் சரியாக அமைந்துள்ளது என்று நினைத்து தென்கிழக்கு திசையில் அடுப்பை வைத்து சமையல் செய்கிறார்கள். யாருடைய வீட்டில் எல்லாம் வடக்கு திசை என்பது 337 டிகிரியில் அமைகி தோ, அவர்களுடைய வீட்டில் தென் கிழக்கு என்பது தன்னால் கிழக்கு தென் கிழக்காக மாறி இருக்கும். கிழக்கு தென்கிழக்கு என்பது ஒரு கடைதல் பகுதி ஆகும். அதாவது அவ்விடத்தில் உள்ள ஒரு பொருள் தூள் தூளாக நொறுங்கும் குணத்தை உடையது.
இந்த கிழக்கு தென்கிழக்கு ஆனது கோபம் மனப்பதட்டம் டென்ஷன் போன்றவைகளை உருவாகும் பகுதியாகும். அவர்கள் தென்கிழக்கு என்று நினைத்து அவ்விடத்தில் அடுப்பை வைத்து சமையல் செய்யும் பொழுது, அதில் சமைத்து உண்ணும் உணவை, உண்ணும் பொழுது அந்த உணவு விஷம் உடையது ஆகிவிடுகிறது. அது சரியாக ஜீரணமாகாமல் கொழுப்புகளாக கல்லீரல் மேல்படிகிறது, இதனால் கல்லீரலின் சுற்றளவு பெருத்து , கணையத்துக்கு மேல் அழுத்தத்தை உண்டாக்கி இன்சுலின் சுரப்பை தடைசெய்கிறது.

நெருப்பு சம்பந்தப்பட்ட அடுப்பு ESE திசையில் இருந்தால் அதை மிகைப்படுத்தி பதற்றம், மன அழுத்தம், பதட்டம், கொழுப்பு கல்லீரல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அது சர்க்கரை நோயை உண்டாக்கும்.

மேலும் ESE இல் நீங்கள் சிவப்பு நிறம் இருந்து, அதை கண்டுகொள்ளாத பொழுது அவ்வீட்டின் வசிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் தாக்கம் உண்டாகும்.

ESE திசையில் சிவப்பு நிற வர்ணம் பூசி இருந்தாலோ அல்லது சிவப்பு நிற திரைச்சீலைகள் இருந்தாலோ இந்த பாதிப்புகள் உண்டாகும்.

சர்க்கரை நோயை 100% குணப்படுத்த முடியுமா என்று சொன்னால்,அதற்கு என்னிடம் பதில் இல்லை, நோய் உண்டானது உண்டானது தான் அதன் வீரியத்தை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம். இதுபோல் வீட்டில் இது யாருக்கும் உண்டாகாமல் தவிர்க்கலாம். இந்த விஷயத்தில் நான் ஆய்வு செய்தது உணர்ந்தது என்னவென்றால்,

வகை 1 நீரிழிவு எனப்படும் மற்றொரு பரம்பரை நீரிழிவு நோய் உள்ளது.இதில் கணையம் இன்சுலின் தயாரிப்பதை நிறுத்துகிறது.

அது ஏன் நிகழ்கிறது என்றால், யாராவது சர்க்கரை நோய்க்கு மருந்து கொடுக்க ஆரம்பிக்கும் போது,சிறிது நேரம் கழித்து, உங்கள் ஆழ் மனம் உடல் பெறுவதை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறது.மருந்து மற்றும் கணையத்தில் இருந்து போதுமான இன்சுலின் அதை உருவாக்காது தடைபடுகிறது.

வகை 1 நீரிழிவு நோயை மாற்றுவது சற்று கடினமாக இருக்கும்.ஆனால் நீங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்ட வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை நீங்கள் குணப்படுத்தலாம்.எனவே நான் உங்களுக்கு சொன்ன முதல் திசை ESE ஆகும், இதில் நெருப்பு இருப்பது நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.

இது தவிர, வேறு காரணங்களும் உள்ளன.

கழிவுஅகற்றும் திசையான தெற்கு - தென்மேற்கு (SSW), அல்லது மேற்கு திசையில், ESE திசையில் சில பொருள்கள் இருந்தால், அதனால் நீரிழிவு நோய் கூட ஏற்படலாம்.

ESE திசையானது கடைதலை (Charning) குறிக்கும் திசையாகும்.
இப்போது ESE திசையுடன் தொடர்புடைய பொருள்கள் என்னவென்றால், கடையும் தத்துவத்தில் இயங்கும் அனைத்து பொருட்களும், மேலும் சலிப்பு உண்டாகும் அனைத்து பொருட்களும்.அதாவது
சலவை இயந்திரம், மிக்சர், கிரைண்டர், அம்மிக்கல், ஆட்டுக்கல், மாவுதிருகி போன்ற பொருட்கள் ESE திசையை குறிக்கிறது.

உங்கள் வீட்டில் தெற்கு - தென்மேற்கு (SSW ) உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றும் திசையாகும். இந்த திசையில் சலவை இயந்திரம் இருந்தால், உங்கள் உடலில் இருந்து நல்ல சக்திகள் அகற்றப்படும்.உணவு செரிமானம் ஆகாமல், உணவிலிருந்து ஊட்டச்சத்து பிரித்து உடம்பில் சேராமல் வெளியேற்றும் அதனால் உடலுக்கு சக்தி குறைபாடு உண்டாகிறது.இது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக நடந்து உடல் பலகீனம் ஆகிறது.

எனவே கழிவகற்றும் பகுதியான SSW வில் கடையும் தன்மையுடைய பொருட்கள் இருந்தால், நீரிழிவு உண்டாக்கும்.

3வது வாஸ்து குறிப்புகள்,

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால்,அப்போது சர்க்கரை நோய் வரலாம்.உங்கள் உடலால் உணவை சரியாக ஜீரணிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு நீரிழிவு நோய் வரலாம்.

வடமேற்கு திசையானது நமது உடலின் வயிற்றை கட்டுப்படுத்துகிறது.உங்களுக்கு வடமேற்கில் ( NW) வாஸ்து தோஷம் இருந்தால், சர்க்கரை நோய் வரலாம்.

நீரிழிவு நோய்க்கான வாஸ்து தீர்வுகள் :

இதுவரை நீரிழிவு நோய் உருவாவதற்கு 3 திசைகள் காரணம் என்று பார்த்தோம். அப்பொழுது அதற்கான தீர்வுகளை காண்போம்.

உங்கள் வீட்டில் முதலில், ESE திசையில் இருந்து அனைத்து நெருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும் அகற்றவும், SE பகுதிக்கு எரிவாயு அடுப்பை மாற்றவும், ESE பகுதியில் சுவரில் உள்ள சிவப்பு நிறம், சிவப்பு திரைச்சீலைகள் போன்றவற்றை மாற்றவும்.

அப்படி மாற்றுவதற்கு வழி இல்லை என்றால், சாத்தியமில்லை என்றால், நீங்கள் பச்சைக் நிற கல்லை (Baroda green granite Stone) ESE திசையில் எரிவாயு அடுப்புக்கு கீழே வைக்கலாம்.

SSW திசையில் இருந்து கடையும், பொடி செய்யும் தன்மையுடைய அனைத்து பொருட்களையும் அகற்றவும்.

NW திசையில் உங்களுக்கு ஏற்றத்தாழ்வு இருந்தால், அதை அகற்றவும் அல்லது சரி செய்து சமநிலை படுத்திக் கொள்ளவும். மேலும் வடமேற்கு திசையில் உள்ள காற்று சம்பந்தப்பட்ட பொருட்களை அகற்றவும்.

இந்த தீர்வுகளை பின்பற்றினால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

உங்கள் இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதிப்பது போன்று, சிகிச்சைகளைச் செய்யும்போது நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் இந்த தீர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக குறைக்கும். அதன்பின்புமருத்துவரின் ஆலோசனையுடன் குணமடைந்த பிறகு மருந்து உட்கொள்வதை நிறுத்தலாம்.

இந்த ஆய்வு முடிவுகள், பல இடங்களில் பரிசோதித்துப் பார்த்து, ஓரிரு மாதங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்த நபர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது நீரிழிவு நோய்க்கு மருந்து எடுக்க தேவையில்லை என்ற நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

வாஸ்து சாஸ்திரம் என்பது ஜோதிடத்தில் ஒரு அங்கம். ஜோதிடத்தில் ஒரு பரிகார முறை தான் வாஸ்து சாஸ்திரம். அதை சரியான முறையில் கையாண்டால் நோயற்ற வாழ்வும் மனநிம்மதியும் பெற்று நலமுடன் வாழலாம். நம் தலைமுறைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கி விட்டுச் செல்லலாம்.

இந்த அற்புதமான கலையை எனக்குத் தந்து, மக்கள் சேவை செய்ய வைத்த,

ஸ்ரீ பஞ்ச பூதேஸ்வரருக்கும்
ஸ்ரீ த்ரிவிக்ரம பெருமாள் திருவடி களுக்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,

தயவுசெய்து இந்த பதிவை படித்துவிட்டு நடந்து செல்ல வேண்டாம். உங்கள் வீட்டிலோ | உங்கள் உறவுகளும், நண்பர்களும் | அக்கம்பக்கம் வீட்டினரும் இந்த நோயால் வருந்தி கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் எடுத்துக்கூறி அவர்கள் நோய் தீர நீங்கள் காரணமாக இருந்து சேவை செய்து புண்ணிய பலனை அடைய பிரார்த்திக்கிறேன்.

கமெண்டில் அந்த திசையை எப்படி கண்டுபிடிப்பது என்று கேள்விகளை தயவுசெய்து எழுப்ப வேண்டாம். பல வேலைகளுக்கு இடையில் இந்த பதிவை பதிவு செய்கிறேன் . உங்கள் அருகாமையில் உள்ள சிறந்த வாஸ்து நிபுணர்களை அணுகி அதற்குண்டான திசையை அறிந்து கொள்ளுங்கள்.

பிடித்திருந்தால் தயவு செய்து ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

நீங்கள் தரும் ஆதரவுகளை பொறுத்துத்தான் மற்ற நோய்களுக்கு உண்டான வாஸ்து பதிவுகள் வெளிவரும்.

தரமான ஒரு கல் Rs.125சாதாரன ஒரு கல் Rs.90விசேடமான  கொங்கிறீட் மிக்சர் & இயந்திரம் மூலம்  சிறு லாபத்தில் கல் உற்பத்தி.நீங்...
29/01/2026

தரமான ஒரு கல் Rs.125
சாதாரன ஒரு கல் Rs.90

விசேடமான கொங்கிறீட் மிக்சர் & இயந்திரம் மூலம் சிறு லாபத்தில் கல் உற்பத்தி.

நீங்களே பரீட்சித்து கொள்ளலாம்.

1.பெருக்கன் மண்,3/4 இஞ் சல்லியுடனான கல் உற்பத்தி.

8000, 5000,2000,1000,500,200 மொத்த கல் ஓடர்களுக்கு மட்டும்.

நீங்கள் விரும்பிய ஓடர்களுக்கு உற்பத்தி செய்து குறைந்தது 3 தொடக்கம் 7 நாட்கள் 3 நேரமும் நீர் ஊற்றி வழங்கப்படும். ( ஒரு பைக்கற் சீமெந்திற்கு 56,66, கற்கள் நீங்கள் விரும்பும் கலவைபடி )

இன்றைய விற்பனை விலை :

(சீமெந்பைக்கற்றுக்கு 62-66 கல்)பெருக்கன் மண் & கருங்கல் சல்லி.

தரமான ஒரு கல் Rs.125
சாதாரன ஒரு கல் Rs.90

டிப்பர் பெருக்கன் மண் Rs.108,000
டிப்பர் 5நூல் கருங்கல் சல்லி Rs.58,000

மேலதிக விபரங்களுக்கு .0775001244

29/01/2026

#கணவன் ஒரு முறையும்....
#மனைவி 100 முறையும்....
படிக்க வேண்டிய செய்தி :

#வாழ்க_வளமுடன்....

#சண்டை இல்லாத வீட்டில் #லட்சுமி தங்குவாள்...

பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில்.
செல்வத்திற்கு பஞ்சமில்லை.

எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது.
ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி,

‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன்.

நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே....
இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன்.

அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள்.

ஆனால்...
என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.

மறுநாள் பொழுது விடிந்தது.
வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார்.

மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.

ஆனால்...
அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர்.

‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்;
நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்;
மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.

அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம்,

‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும்,

அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை.

ஏனெனில்...
எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ,

அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும்,
அல்லது...
நிலைக்காமல் போய்விடும்.

எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.

இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது.

அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள்.

அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும்.

இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம்.

இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.

லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய்.

எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ,...???

எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ,????

அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன்.

எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் & குடும்பத்தில் . பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ,????

எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ,????

பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ..????

அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்....

தகவல் வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களையும் வணங்கி மகிழ்கிறேன்...

எல்லாரும் எல்லா சுகங்களையும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன்

வாழ்க வளமுடன்....

பிச்சைக்காரன்  ஒருவன் விலை உயர்ந்த வைரம் ஒன்றை வழியில் கண்டெடுத்தான்... அவனின் சொத்து மதிப்பு என்று பார்த்தால் அழுக்குப்...
13/12/2025

பிச்சைக்காரன் ஒருவன்
விலை உயர்ந்த வைரம் ஒன்றை
வழியில் கண்டெடுத்தான்...

அவனின் சொத்து மதிப்பு
என்று பார்த்தால் அழுக்குப் படிந்த
அவனது உடை மட்டுமே...

அந்த வைரத்தின் மதிப்பு
என்னவென்று அவனுக்குத் தெரியாததால் அதைத் தன்னுடன்
இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்....

அதை கவனித்துக்கொண்டிருந்த
வைர வியாபாரி ஒருவன்
பிச்சைக்காரனிடம் சென்று
இந்தக் கல்லை எனக்கு கொடுத்துவிடு
நான் உனக்கு பணம் தருகிறேன்....என்றான்...

உடனே பிச்சைக்காரன்..
அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்த கல்லை நீ
வைத்துக்கொள் என்றான்.

அதற்கு அந்த வைரவியாபாரி
இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்
ஒரு ரூபாய் அதிகம்!
நான் உனக்கு 50 பைசா தருகிறேன்
அதை எனக்கு கொடுத்து விடு இல்லையென்றால்
எனக்கு வேண்டாம்" என்றான்...

உடனே பிச்சைக்காரன் சரி
பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலேயே இருக்கட்டும்
என்றவாறே நடக்கலானான்.

வைர வியாபாரி எப்படியும் பிச்சைக்காரன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்குத் தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்....

அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம்
1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்...

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன்
அட அடிமுட்டாளே!

கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு
இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் என்றான்....

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் யார் முட்டாள்..?
எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை அந்த
விலைக்கு விற்றுவிட்டேன்...

மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த
மகிழ்வுடன் இருக்கிறேன்...

ஆனால் அதன் மதிப்பு தெரிந்தும்
வெறும் 50 பைசாவிற்காக
நீதான் அதை இழந்துவிட்டாய்....

இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று சொல்லி விட்டு சென்றான்...

இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையையே இழந்து விடுகிறோம்...

கிடைத்த வாழ்க்கையை
மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்...

பிடித்த பதிவு... மனதை கவர்ந்த பதிவு பகிர்கிறேன்... நன்றி..

10/12/2025
🔍 ஒரு கான்க்ரீட் கலவை விகிதம் என்றால் என்ன?ஒரு கான்கிரீட் கலவை விகிதம் கான்கிரீட்டை உருவாக்கும் மூன்று முக்கிய பொருட்களி...
10/12/2025

🔍 ஒரு கான்க்ரீட் கலவை விகிதம் என்றால் என்ன?

ஒரு கான்கிரீட் கலவை விகிதம் கான்கிரீட்டை உருவாக்கும் மூன்று முக்கிய பொருட்களின் விகிதாச்சாரத்தை குறிக்கிறது:

1. சிமெண்ட் - கடினமாக்கி வலிமை தரும் பிணைப்பு பொருள்.

2. மணல் (நல்ல ஒன்று) - இடைவெளிகளை நிரப்புகிறது மற்றும் வேலை திறனை மேம்படுத்த உதவுகிறது.

3. Coarse Aggregate - மொத்தமாக மற்றும் வலிமை கொடுக்கிறது (வழக்கமாக நொறுக்கப்பட்ட கற்கள் அல்லது கிரவல்).

4. தண்ணீர் - சிமெண்ட்டை செயல்படுத்துகிறது, மொத்தமாக பிணைக்கும் பேஸ்ட் உருவாக்கும்.

எடுத்துக்காட்டு:

1:2:4 என்ற கலவை விகிதம் என்றால்:

1 பகுதி சிமெண்ட்

2 பாகங்கள் மணல்

4 பாகங்கள் மொத்தமாக

இது அளவு அடிப்படையிலான விகிதம்.

📘 ஏன் வெவ்வேறு விகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன

வெவ்வேறு கான்கிரீட் மதிப்பெண்கள் தேவையான அழுத்த வலிமையின் அடிப்படையில் வெவ்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன (28 நாட்களுக்குப் பிறகு MPa அல்லது N/mm2 அளவிடப்படுகிறது).

✅ பொதுவான கான்கிரீட் மதிப்பெண்களும் அவற்றின் விகிதங்களும்

கிரேடு கலவை விகிதம் (சி:எஸ்:ஏ) அழுத்த வலிமை (28 நாட்கள்) வழக்கு பயன்படுத்து

M5 1:5:10 5 MPA பாத்வேஸ், கான்கிரீட்
M7.5 1:4:8 7.5 MPA துணை அடித்தள சாலைகள்
M10 1:3:6 10 MPA சமவெளி கான்கிரீட், காலடிங்ஸ்
M15 1:2:4 15 MPA தளம், டிரைவ்வேஸ்
M20 1:1.5:3 20 MPa பீம்ஸ், ஸ்லாப்ஸ், பத்திகள்
M25 1:1:2 25 MPA உயர் சுமை கட்டமைப்புகள், வணிக கட்டிடங்கள்

> குறிப்பு: M30, M35, M40 போன்ற அதிக மதிப்பெண்களுக்கு வடிவமைப்பு கலவை தேவை (பெறியியர்களால் செய்யப்படுகிறது, வெறும் பெயரளவு விகிதங்கள் மட்டும் அல்ல, கட்டமைப்புத் தேவைகளின் அடிப்படையில்

🧮 கான்க்ரீட் 1m3 விகிதத்தை எப்படி பயன்படுத்துவது

நீங்கள் M20 கலவையைப் பயன்படுத்தி 1 கன மீட்டர் (m3) கான்கிரீட் தயாரிக்க விரும்புகிறீர்கள் என்று சொல்வோம் (1:1.5:3):

படி 1: கலவையின் பகுதிகளை சேர்க்கவும்

1 + 1.5 + 3 = 5.5 பாகங்கள்

படி 2: பொருள் அளவை தீர்மானிக்க

உலர் பொருட்களை 1m3 பயன்படுத்துவோம் (உண்மையில் உங்களுக்கு ஈரமான கான்கிரீட் 0.9m3 பற்றி கொடுக்கிறது).

🧱 சிமெண்ட்:

\text{Cement part} = \frac{1}{5.5} \times 1 = 0.1818 \, m3

சிமெண்ட் 1 பை = 0.035 மீ3
எனவே:

\text{பைகளின் எண்} = \frac{0.1818}{0.035} \சுமார் 5.2 \text{பைகள்}

🏖️ மணல்:

\text{Sand} = \frac{1.5}{5.5} = 0.2727 \, m3

🪨 ஒருங்கிணைந்த:

\text{Aggregate} = \frac{3}{5.5} = 0.5455 \, m3

💧 தண்ணீர்:

M20 க்கான நீர்-சிமெண்ட் விகிதம் (W/C) பொதுவாக 0.5 ஆகும்

தண்ணீர் = 0.5 \முறை 50 கிலோ = 25 லிட்டர் ஒரு 50 கிலோ பைக்கு
ஆக, 5.2 பைகளுக்கு = 25 × 5.2 = 130 லிட்டர்

📌 முக்கியமான குறிப்புகள்

1. கான்க்ரீட் கலவை

எப்போதும் உலர் பொருட்களை முதலில் கலக்கவும் (சிமெண்ட், மணல், மற்றும் மொத்தமாக).

விரும்பிய நிலைத்தன்மையை அடைய படிப்படியாக தண்ணீரைச் சேர்க்கவும்.

நீர் ஊற்றுதல் கான்கிரீட்டை பலவீனப்படுத்துகிறது

2. குணப்படுத்துதல்

கான்கிரீட்டை குறைந்தது 7–14 நாட்களுக்கு, ஈரப்பிறப்பாக 28 நாட்களுக்கு குணப்படுத்த வேண்டும்.

குணப்படுத்துதல் சரியான நீரேற்றம் மற்றும் வலிமை வளர்ச்சியை உறுதி செய்கிறது.

3. வலிமை மற்றும் பணித்திறன்

அதிக சிமெண்ட் = வலுவான கான்கிரீட் ஆனால் அதிக விலை மற்றும் வெப்பம்.

அதிக மணல் = அதிக வேலை செய்யக்கூடியது ஆனால் பலவீனமானது.

அதிக மொத்தமாக = வலிமையானது ஆனால் இடம் பெறுவது கடினம்.

🧱 சரியான கலவை தேர்ந்தெடுப்பது

நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்றால்... இந்த கலவையை உபயோகிக்கவும்

அடித்தள அடி M15 அல்லது M20
ஸ்லாப்ஸ் மற்றும் பீம்ஸ் M20 அல்லது M25
நடைபாதை அல்லது நடைபாதை M10 அல்லது M15
கட்டமைப்பு பத்திகள் M25 மற்றும் அதற்கு மேல்

12/11/2025

Address

Master Yard, No 20/14, Church Lane, Valaiamman Kovilady, Thirunelvely East, Near Kopay Police Station
Jaffna
40000

Telephone

+94775001244

Website

Alerts

Be the first to know and let us send you an email when MT hardware and transport posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share