20/07/2021
அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவதற்கும், பில்லர் போட்டு வீடு கட்டுவதற்கும் என்ன வித்தியாசம்? புது வீடு கட்ட சிறந்த வழி எது?
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அஸ்திவாரம் போட்டு வீடுகட்டி வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டங்களில் நிறைய பேர் பில்லர் போட்டு வீடு கட்டவே விரும்புகிறார்கள். அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவதற்கும், பில்லர் போட்டு வீடு கட்டுவதற்கும் என்ன வித்யாசம் என்று இங்கு பார்க்கலாம்.
அஸ்திவாரம் போட்டு வீடு கட்ட நம் நிலத்தில் நல்ல வகை மண் இருக்க வேண்டும். நாம் அஸ்திவாரம் பறிக்கும்போது மேலே எப்படி சுவர் எழுப்புகிறோமோ அதற்கு தகுந்த மாதிரி தான் அஸ்திவாரம் பறிக்க வேண்டும். அஸ்திவாரம் இருக்கும் படியே மேலே உள்ள வீட்டின் அறைகளும் இருக்கவேண்டும். நடுவில் நம் இஷ்டத்துக்கு சுவர்களை எழுப்ப முடியாது. இரண்டு மாடி கட்டடங்கள் கட்டுவதாக இருந்தால் அஸ்திவாரம் கொண்ட வீடுகள் கட்டுவது நல்லது. அஸ்திவாரம் கட்டும்போது செங்கல், மண், கருங்கல் போன்ற பொருட்கள் கொண்டுதான் கட்டுவார்கள். அஸ்திவாரம் கட்ட செலவு கொஞ்சம் அதிகமாகும்.
இரண்டு அடுக்கு குடியிருப்புகளுக்கு மேல் வீடும் கட்டும் எண்ணம் கொண்டவர்கள் கண்டிப்பாக பில்லர் வைத்து தான் அஸ்திவாரம் போடவேண்டும். நம் நிலத்தில் தோண்டும் போது பாறை இருந்தால் பில்லர் கட்டமுடியாது. அஸ்திவாரம் தான் போட்டாக வேண்டும். பில்லர் வைத்து அஸ்திவாரம் கட்ட ஆகும் செலவு குறைவு தான். எனவே வருங்காலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் போல இரண்டு, மூன்று தளங்கள் வீடு கட்ட நினைப்பவர்களுக்கு பில்லர் தான் சிறந்த வழி.