Zilla

Zilla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zilla, Tamizhagam.

*என்னை பற்றி :

நான் *சரவணன் ஆறுமுகம்.* தற்போது பெங்களூரில் வசிக்கிறேன், சென்னையில் அயபாக்கம் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. கடந்த 25 வருடகாலமாக தகவல் தொழிநுட்ப துறையிலும், கல்வி துறையிலும் பணியாற்றி தொழில் நடத்தி வந்திருக்கிறேன். நான் பிர்லா பயிலரங்கம் (BITS) – பிலானி-ல் B.S (தகவல் அமைப்பு) என்கிற இளங்கலை பட்டம் பெற்று இருக்கிறேன்.

கடந்த 6 வருடமாக பாரம்பரியம், இயற்கை வேளாண்மை, உணவே மருந்து, சுவ

ரில்லா பள்ளி, தற்சார்பு மற்றும் இயற்கை ஒற்றிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆகியவற்றில் தேடல்கல்களின் முடிவாக சமூக அக்கறை சார்ந்த ஒரு தொழிலும், இயற்கைக்கு திரும்பும் ஒரு முயற்சியாகவும், தற்சார்பு கூடிய ஒரு வாழ்க்கை முறையில் அடுயேடுத்து வைக்கும் ஒரு சிறு முயற்சிதான் இந்த ஜில்லா மற்றும் பார்ம்ஜில்லா( www.farmzilla.org) திட்டங்கள். ஜில்லாக்கான முயற்சி கடந்த ஒரு வருடமாக கடுமையான தேடலின், முயற்சியின் பயனாக தான் இந்த அடுப்பை வடிவமைத்து இருக்கிறேன். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த ராக்கெட் முறையிலான அடுப்புகள் நிறைய உண்டு ஆனால் அவற்றை நாம் பயன்படுத்த முடியாது. நம் சமையல் மற்றும் சுழலுக்கு ஏற்ப இந்த தனிபட்ட மற்றும் எளிய முறையில் இதை வடிவமைத்து உள்ளேன், மற்றும் இந்த வடிவமைப்பை *இந்திய காப்புரிமை கழகத்திலும் பதிந்து இருக்கிறேன்.*

காந்தி தன் தற்சார்பு வாழ்க்கைமுறையை முன் மொழிந்து விட்டு சென்றுள்ளார். அதாவது, நமக்கு தேவையான அனைத்தையும் உள்ளூரிலையே உற்பத்தி செய்வது. உதாரணத்திற்கு ஒரு கிராமம் இருக்கிறது, அங்கு விவசாயி, மீன் பிடிப்பவர், மண் பாண்டம் செய்பவர், நெசவாளர் எல்லாரும் இருக்கிறார்கள்; இவைதான் அடிப்படை தேவை... இதை அங்கேயே உற்பத்தி செய்து, அங்கேயே பண்டமாற்றி கொள்வது காந்தி முன்வைத்த கருத்து. இதே கருத்தை ஒட்டி தான் இந்த சிறு முயற்சியை எடுத்துள்ளேன். பாரம்பரியத்தை மீட்டு எடுக்கும் இந்த சிறு முயற்சிக்கு உங்களுடைய ஒத்துழைப்பை நாடி தயாரிப்பை தொடங்கி இருக்கிறோம்.

Be CHANGE ..
20/06/2019

Be CHANGE ..

A pilot project aimed at providing smoke-free environment in the kitchen for women will be launched by the Maharashtra government, Finance Minister Sudhir Mungantiwar announced in his Budget speech Tuesday. The project, named "Chullah (wood-fired

வாழ்த்துக்கள் சரவணன்சிறு சந்தேகம் ...பெரும்பாலும் மக்கள் கேஸ் தான் பயன் படுத்துகின்றனர், ஹோட்டல் , கல்லூரி விடுதிகள் வரை...
01/03/2018

வாழ்த்துக்கள் சரவணன்

சிறு சந்தேகம் ...பெரும்பாலும் மக்கள் கேஸ் தான் பயன் படுத்துகின்றனர், ஹோட்டல் , கல்லூரி விடுதிகள் வரை ... அப்படி இருக்க மக்கள் விறகு அடுப்பை பயன்படுத்துவார்களா ?
------------------------------------------------------------------------------
வணக்கம் சகோ.. ஒரே பதிவில் பதில் அளிக்க முடியுமா என தெரியவில்லை.. முயற்சிக்கிறேன்.

கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் தான் "சீனாவை" வீழ்த்தி இந்தியா உலக அளவில் ஒரு சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

எதிலென்றால் உலகத்திலேயே அதிக அளவு அதாவது 2.4 மில்லியன் டன் (சீனா 2.2 மில்லியன், நம்முடைய சராசரி மாத கொள்முதல் 1.7மில்லியன்) LPG இறக்குமதி செய்து சாதனை படைத்து இருக்கிறோம். இந்த அளவு 2015தை ஒப்பிடும் போது 2.5 மடங்கு அதிகம் காரணம் மத்திய அரசு மானிய விலையில் கிராமங்கள் வரை விரிவுபடுத்தியது, இங்கே கவனிக்கப்பட வேண்டியவை இலவச காஸ் இணைப்புதான், இலவச காஸ் சிலிண்டர் இல்லை, மானிய விலையில் காஸ் சிலிண்டர் கொடுத்து அனைத்து கிராமப்புற மக்களை பழக்கிவிட்டு பின்னர் படிப்படியாக மானியத்தை நீக்கி அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்க கூடிய நிலைமைக்கு வர தொடங்கியாச்சி (இந்த மாதிரி சர்வதேச கம்பனிகள் தான் தங்களுடைய பொருட்களுக்கு மக்களை அடிமையாக்கி பின்னர் மொத்த சந்தையையும் கட்டுக்குள் கொண்டுவருவார்கள் தற்போது நம் அரசாங்கங்களே அந்த வேலையை செய்கிறது), இதோடு மட்டுமில்லை பெட்ரோல் மற்றும் டீசல் போன்று சந்தை (எந்த சந்தையை குறிக்கிறார்கள் என்பது நம் யாருக்கும் தெரியாது) விலைக்கு ஏற்ப தினசரி விலையை கொண்டுவரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

அனைத்து வளர்ந்த நாடுகளும் தற்சார்பை நோக்கி போக.. நாம் தற்சார்பு விட்டு விலகிக்கொண்டு இருக்கிறோம், ஒரு விஷயம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் .. 2030ஆம் வருடத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியம் பொட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்தாகிவிட்டது. அமேரிக்காவிலும் அதி தீவிரமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புதிய தொழிற்நுட்பம் சார்ந்த வாகன கொள்கைகளை வகுத்துக் கொண்டு இருக்கிறார்கள், மேலும் சவூதி அரேபியாவில் எலான் மாஸ்க் அவர்களின் நிறுவனத்துடன் சேர்ந்து உலகிலேயே மிக பெரிய சூரிய மின்சாரம் தயாரிக்கும் ஒரு பூங்காவை உருவாக்கி வருகிறார்கள் மற்றும் ஐக்கிய எமிரேட்-ல் தற்போதைக்கு உலகிலேயே அதி வேகமான வாகனம் என்று சொல்ல கூடிய “ஹைப்பர் லூப்” எனும் (மணிக்கு 1200 கி.மீ வேகம்) மின்சார வாகனத்தை நிறுவிக் கொண்டு இருக்கிறார்கள், ஆக எண்ணெய் வலம்மிக்க நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் பொட்ரோலிய பொருட்களை விட்டு வெளியே வர, நம் நாடு மட்டும் உலக அளவில் உள்ள பெட்ரோலிய லாபியிடன் கைகோர்த்து கொண்டு நம்முடைய தற்சார்பான பாரம்பரியமான முறைகளை ஒவ்வொன்றாக அழிப்பது தான் அனைத்து ஆட்சி(யர்)களின் குறிக்கோளாக இருக்கிறது, எப்படி எல்லா கிராமங்களையும் தண்ணீர் பாக்கெடும், கேன் தண்ணீர் விக்கிற நிலைமைக்கு கொண்டு வந்தாங்களோ அதே போல நம்ம மரபு எரிபொருளான விறகு மற்றும் சான, கரி ஆகியவளை ஒழிப்பதற்கான நோக்கம் தான் இது.

இதற்கு கூறும் காரணம் புகை மாசு மற்றும் மரபு அடுப்புகளினால் வருடத்திற்கு பல ஆயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலி.. இதை தடுக்க தான் LPG என்கிறார்கள்..உண்மைதான் நம்முடைய விறகு அடுப்புகளின் ஏற்படும் அதீத புகை தான் இதற்கு காரணம், இந்த குறையை போக்கி விட்டால் மேற்குறிய குறையையும் களையலாம். ஒன்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், LPG என்பது Fossil Fuel என்கிற “புதைபொருள்” எரிபொருள் வகையை சார்ந்து, இந்த எரிபொருளை தான் முழுவீச்சில் திணிக்கிறார்கள்.

சரி இதற்கெல்லாம் தீர்வு விறகு அடுப்பதானா ? இல்லை புதுபிக்ககூடிய ஆற்றலான சூரிய சக்தி, சான எரிவாயு மற்றும் நாம் பயன்படுத்து மரக்கரி, மரதூள், சாண விறாட்டி போன்றவைகளை எரிபொருளைக் கொண்டும் நாம் பயன்படுத்தலாம். தற்சார்புடன் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள விறகு அடுப்பும், மன்பாண்டமும் ஒரு தேர்வுதான், விறகு அடுப்பிற்கு தேவையானவற்றை நாம் தோட்டத்து கழிவுகளில், தென்னை மர கழிவுகள், சருகு மற்றும் விறகிற்காக வளர்க்கும் மரங்களைத்தான் உபயோகபடுத்துவோம்.

95% பெட்ரோலிய பொருட்களை நாம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம் சராசரியாக ரூ38.50 ஒரு கிலோ ஆகிறது, கடந்த செப்டம்பரில் இருந்து நாம் அமெரிக்காவிடம் இருந்தும் வாங்க ஆரம்பித்து இருக்கிறோம், அவர்களின் விலை ரூ.34.50. எந்த நாடும் அதிகமாக ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ சார்ந்து இருந்தால் என்ன நிலைமை ஆகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாமல் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகள் தான் உலகத்தில் தயாராகும் 45% LPG இறக்குமதி செய்கிறது.. அமெரிக்கா அல்ல ஐரோப்பா அல்ல ..

இன்னொரு முக்கியமான ஒரு விசயத்தை மறந்து விடக்கூடாது, அதாவது எந்த ஒரு பொருளுக்கும் மறை நீர் கனக்கிடுவதை போல் நாம் இதற்கும் மறை நீர் மற்றும் மறை ஆற்றல் கனக்கிட்டால் ..இரவு துக்கம் கெட்டு போகும்.

இப்போது விசயத்திற்க்கு வருவோம், விறகு அடுப்பு மற்றும் சான எரிபொருள் சுற்றுச்சூழலை கொடுக்கிறது என்றால் நாம் அதாவது வல்லரசாக வரக்கூடிய இந்தியா இதை எப்படி சரி செய்யலாம் என்பதை விடுத்து LPG தேர்ந்து எடுத்தது எதற்கு ?? அரசியல் தவிர வேறு என்ன இருக்க முடியும் ?

நம்முடைய மரபு அடுப்புகளை எளிய அறிவியலை முறைகளை கொண்டு சிறப்பான அடுப்புக்களாக உருவாக்கலாம். எந்த ஒரு எரிபொருளையும் எரிக்க சரியான அளவு பிராணவாயும், எரியும் கொளகலனின் வடிவத்தை வடிவமைத்தாலே புகையையும், கரி கட்டுபடுத்தி ஆற்றலையும் மேம்படுத்தலாம். ஆக நாம் சிறுதானியத்தையும், செக்கு எண்ணையும் தேவையை உணர்ந்தது போல் நாம் அடுப்புக்கும் வந்தே ஆகவேண்டும். சரியான தொழில்நுட்பத்துடன், கிடைக்ககூடிய விலையில் கிடைத்தால் ..

தற்சார்பபை பேசும் நாம் எப்படி பாரம்பரிய விறகு அடுப்பை விட முடியும் ???

அனைவருக்கும் பகிரவும், நன்றி

நன்றி : ராய்ட்டர்ஸ்

#பார்ம்ஜில்லா #ஜில்லா_அடுப்பு #ஜில்லா #விறகு_அடுப்பு #அடுப்பு #தற்சார்பு

Zilla's Community Stove - Demo Video.
02/01/2018

Zilla's Community Stove - Demo Video.

Here is my First Zilla's Community Stove released under Creative Commons License. for more info : http://www.farmzilla.org/blog/zcs/ Zilla's Community Stove ...

மக்களே, அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இதோ எங்கள் முதல்"திறந்த வன்பொருள்" அடுப்பு, இந்த அடுப்பின் வடிவமைப்...
01/01/2018

மக்களே, அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இதோ எங்கள் முதல்"திறந்த வன்பொருள்" அடுப்பு, இந்த அடுப்பின் வடிவமைப்பு முற்றிலும் திறந்த மூலத்தின் அடிப்படையில் வெளியிடபடுகிறது .

தயாராகுங்கள் இந்த "எளிய விறகு அடுப்பு" ஐ கட்ட !! மறக்காமல் அனைவருக்கும் பகிரவும் , சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு தொடர்புக் கொள்ளுங்கள் ..

People, Happy New Year to All.. Here is our First Open Hardware Community Stove, Pls download and start Build your own "Simple Firewood Stove" Kindly share to all and keep update for future version.

PDF & Drawing download link available in comments

01/01/2018

Zilla Wood Stove - Barbeque Add-On Module .. Under Development.
17/06/2017

Zilla Wood Stove - Barbeque Add-On Module .. Under Development.

ஜில்லா அடுப்பானது மூன்று விதங்களில் கிடைக்கிறது.ஜில்லா சிறியது (Small) : இந்த அடுப்பு எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல...
14/06/2017

ஜில்லா அடுப்பானது மூன்று விதங்களில் கிடைக்கிறது.

ஜில்லா சிறியது (Small) :

இந்த அடுப்பு எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல ஏதுவாக வடிவமைக்கப் பட்டது. குறிப்பாக மலை ஏறுபவர்களுக்கும், மலைகளில் தங்குபவர்களுக்கும், சுற்றுலா செல்பவர்களுக்கும் மிகவும் ஏற்றது. மற்றும் சிறு குடும்பம் 4 பேர் வரை சமைக்கும் குடுப்பத்திற்க்கும் ஏற்றது. அனைத்து விதமான சமையல் அல்லது சுடுநீர் போடுவதற்கும் ஏற்றது.
*விலை : ரூ 2,800/- (வரி மற்றும் அனுப்பவதற்கான கட்டணம் தனி)

ஜில்லா நடுத்தரம் (Medium)

இந்த அடுப்பு மேலே குறிபிட்ட அனைத்து வேலைகளையும் செய்ய ஏற்றது மற்றும் பெரிய குடுப்பத்திற்க்காக 1௦-12 பேர் வரை சமைக்க ஏற்றது.

விலை : ரூ 4,800/- (வரி மற்றும் அனுப்பவதற்கான கட்டணம் தனி)

ஜில்லா பெரியது (Medium)

இந்த அடுப்பு சமுதாய கூடங்களுக்கும், பள்ளி மற்றும் கோவில் சமையல் கூடங்களுக்கும் அல்லது உணவு விடுதிகளுக்கானது.

விலை : ரூ 7,200/- (வரி மற்றும் அனுப்பவதற்கான கட்டணம் தனி).

தற்போது முதல் தொகுதிக்கான முன் பதிவு தெடங்கி இருக்கிறது. இந்த மாதம் 25ம் தேதி வரை பதிவுகள் மேற்கண்ட சலுகை விலையிலேயே கிடைக்கும். தங்களுக்களுடைய நண்பர்களுக்கும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் விபரங்களுக்கு இதே என்னை தெடர்புக் கொள்ளவும்.

பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள், இதே என்னை தெடர்புக் கொள்ளவும் நான் என்னுடைய வங்கி விபரத்தை அனுப்புகிறேன், அதில் நீங்கள் தொகையை செலுத்தி உறுதி செய்துக்கொள்ளவும் . முதல் தொகுதிக்கான டெலிவரி ஜூலைமாதம் முதல் வாரத்தில் வந்தடையும். நன்றி.

14/06/2017

வணக்கம், ஜில்லா அடுப்பு பற்றிய அறிமுகம்.

முதலில் உங்களுக்கு ஜில்லா அடுப்பை பற்றி விசாரித்ததற்கு நன்றி..

ஜில்லா – இந்தியாவின் முதல் வணிக ராக்கெட் அடுப்பாகும். (As Per Office of Controller General of Patents, Design and Trademark – Ministry of Commerce and Industry தரவுகளின் படி) மற்றொரு வழியில் கூறுவதென்றால் நவீன விறகு அடுப்பாகும். ராக்கெட் அடுப்பு என்பது ஒரு சிறிய அல்லது கட்டுபடுத்தபட்ட வழியில் எரிபொருளையும் பிராண வாயுவையும் செலுத்தி திறமையாக மற்றும் அதிக தீயை கொடுக்கக் கூடிய ஒரு அடுப்பாக்கும். இதில் சுற்றிலும் அடக்கபட்ட ஒரு எரிப்பு அறைக்குள் எரிபொருள் நன்கு எரிக்கபட்டு அதன் பின் செங்குத்தான புகை போக்கி வழியே நெருப்பை கடத்தி.. சமைக்கும் தளத்திற்கு அதிகபடியான, திறமையான நெருப்பை அளித்து நம்முடைய சமையல் வேலைகளை எளிமையாக முடிக்க உதவுகிறது.

இந்த முறை அடுப்பகளில் எரிப்பொருள் திறமையாக எரிப்பதால் குறைந்த புகையும், கரியும் படிக்கிறது. மற்றும் பாத்திரங்களில் படியும் கரியை வேலை முடிந்தவுடன் கழுவி விட்டால் படிந்துள்ள கறியை முழுவதுமாக அகற்றி விடலாம்,
ஜில்லா அடுப்பு வீட்டில் கரி அடுப்பிற்க்காக கட்டபட்ட சமையலறைகளிலும் அல்லது வீட்டிற்கு வெளியேயும் அல்லது தோட்டங்களிலும் அல்லது வயல் விடுகளிலும் அல்லது சுற்றுலா செல்லும் இடங்களுக்கு ஏற்றது.

ஜில்லா அடுப்பிற்கு தேவையான அனைத்து எரிபொருளும் அதாவது தோட்டத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து விதமான காய்ந்த சருகு, இலை, தழை, இளநீர் ஓடு, தென்னை மட்டை, தேங்காய் ஓடு, குச்சி மற்றும் விறகு என அனைத்துவிதமான காய்ந்த கழிவுகளை பயன்படுத்தலாம்.

Address

Tamizhagam

Alerts

Be the first to know and let us send you an email when Zilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share